தமிழகத்தில் கோவிட் பாதிப்பு குறைந்துள்ளது- தமிழக அரசு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,661 -ல் இருந்து 1,647 ஆக சற்று குறைந்துள்ளது. 19 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,619 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,50,159 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 1,646 பேருக்கும் ஆந்திர மாநிலத்தவர் ஒருவர் உள்பட 1,647 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,48,688 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,56,04,563 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 944 பேர் ஆண்கள், 703 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,46,181 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 11,02,469 ஆகவும் அதிகரித்து உள்ளது. 1,619 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,96,316 ஆக உயர்ந்துள்ளது.

19 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 3 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 16 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,379 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: மாணவர்களிடையே வேகமாக கொரோனா பரவுவதால் 2 பள்ளிகளுக்கு பூட்டு..!