தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்ததையடுத்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி திறக்கப்பட்ட 20 நாட்களில் 80க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியில் 8 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மேல்நிலைப்பள்ளியிலும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடன் பயிலும் மாணவர்களுக்கு பரிசோதனை செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவன் பயின்ற வகுப்பு மற்றும் அருகில் உள்ள வகுப்புகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம்செய்யப்பட்டுகிறது. சுத்தம் செய்யும் பணிக்காக இரண்டு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வந்தவாசி அடுத்த தெள்ளார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவிக்கும், குணக்கம்பூண்டி கிராமத்தில் பிளஸ்-2 படிக்கும் இரண்டு மாணவிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இரண்டு பள்ளிகளும் தற்காலிகமாக மூடப்பட்டது. இரண்டு பள்ளிகளிலும் சுகாதார பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: நாளை வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்



