பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச பயிற்சி தரப்படும்- அன்பில் மகேஷ்

தமிழக அரசுப் பள்ளிகளில், தமிழ் வழிக் கல்வியில் படிக்கும் மாணவர்கள், ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு, பயிற்சித் தரப்படும் என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், சென்னை மந்தவெளியில், செய்தியாளர்களிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு என்பதே ஒரே குறிக்கோள். மாணவர்கள் தங்களின் பிறந்த நாளில் மரக்கன்று நடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது ஒரு நல்ல பழக்க வழக்கம்.

அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்சி தரப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியும். பள்ளி மாணவர்களின் நலனுக்காகவே இந்த அரசு எப்போதும் செயல்படும்.

இதையும் படிங்க: நாளை வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்