இன்றைய ராசி பலன் !

Today horoscope
ராசி பலன்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.புதிதாக ஆரம்பித்த தொழில் விரைவில் லாபம் வரும்.குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் சிறிய பயணம் செய்ய திட்டமிடலாம்.சேமிப்பு கணக்கு தொடங்குங்கள்.

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் ஆசையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் சேமித்த பணம் எல்லாம் செலவாகும்.ஒரு புதிய வேலைக்கு அடியெடுத்து வைப்பவர்கள் திறம்பட செயல்பட வேண்டும்.மாணவர்களுக்கு படிப்பில் அதிக கவனம் தேவை.

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நிதி ரீதியாக, நீங்கள் வசதியாக இருக்கிறீர்கள் மற்றும் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முதலீடு செய்வதைப் பற்றி சிந்திக்கவும்.நீண்ட காலமாக காலியாக இருந்த ஒரு சொத்தை வாடகைக்கு விடுவது சாத்தியமாகும்.

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் வேலையில் உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதை நிறைவு செய்தால் மட்டும் போதாது கூடுதலாக உழைக்க நேரிடும்.ஒருசிறிய ஓய்வு உங்களுக்கு தேவைப்படலாம்.உணவில் கவனம் தேவை.

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் வேலையில் கவனம் செலுத்துவது மூலம் பிரகாசமான எதிர்காலம் உள்ளது.குடும்பத்துடன் சுற்றுலா தலத்திற்கு பயணம் செய்வது உங்களுக்கு மனநிறைவை கொடுக்கும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.நடைப்பயிற்சி மற்றும் லேசான உடற்பயிற்சிகளால் ஆரோக்கியம் மேம்படும்.குடும்பத்தினருடன் ஒற்றுமையாக இருங்கள்.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேலையில் மேலதிகாரியின் உங்கள் மீது கோவப்படலாம்.குடும்பத்தில் சிறிய பிரச்சனைகள் வந்து போகும்.யோகா செய்வது மனதிற்கு அமைதியை கொடுக்கும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தினருடன் மனவருத்தம் உண்டாகலாம். பழைய கார் அல்லது வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்வதற்கு நல்ல விலை கிடைக்கும்.ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடன் உள்ள ரூம்மேட் சற்று மனவருத்தத்தை தரலாம்.வேலையில் நல்ல மகிழ்ச்சி இருக்கும்.நண்பர்களுடன் உல்லாசப் பயணம் மேற்கொள்வது மகிழ்ச்சியாக இருக்கும்.பிடித்த நபருடன் சிறிய மனக்கசப்பு வரலாம்.

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை.புறம்பேசுவதை தவிர்க்க வேண்டும்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை.மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.கூட வேலைசெய்பவர்களிடம் அமைதியை கையாளவேண்டும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்கும்.குடும்பத்தில் அமைதி நிலவும்.உங்களுக்கு பிடித்த ஒரு நபர் உங்களை தேடி வருவார்.உடல்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியம் மேம்படும்.

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தையும் இரு முறை யோசித்து செய்வது நல்லது.நண்பரின் வருகையால் மனதில் மகிழ்ச்சி தோன்றும்.