கேரளாவில் திறக்கப்படும் பள்ளிகள் !

school closed
ஜனவரி 31ம் தேதி வரை பள்ளிகள் மூடல்

கொரோனா தொற்று காரணமாக ஒரு ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டன.தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

கேரளா பொதுக் கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி, சுகாதார மற்றும் பிற சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்துரையாடி ஐந்து நாட்களுக்குள் பள்ளிகள் திறப்பு குறித்து மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அதில் இரண்டு மாணவர்களை மட்டுமே ஒரு பெஞ்சில் அனுமதிப்பது .உடல் வெப்பநிலை தொடர்ந்து அளவிடப்படும். ஆஃப்லைன் வகுப்புகளுடன் ஆன்லைன் வகுப்புகளும் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆரம்ப கட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லத் தேவையில்லை என்றும் குழந்தைகளின் பெற்றோருக்கு ஆன்லைன் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் சிவன்குட்டி கூறினார். பள்ளிகளில் கை கழுவும் வசதிகள், சானிடைசர்கள் மற்றும் முகமூடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் வகுப்புகள் சுத்தப்படுத்தப்படும்.

பள்ளிகளுக்கு அருகில் உள்ள பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மாணவர்களுக்கு பொருட்களை விற்க அனுமதிக்கக் கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க : இன்றைய ராசி பலன் !