காலத்தால் அழியாத பாடல்களை பாடிய எஸ்பிபி நினைவு நாள் இன்று !

அணைத்து ரசிகர்களையும் கொள்ளைகொண்ட பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் முதலாமாண்டு நினைவு தினம் இன்று.இவர் தமிழ்,தெலுங்கு,கன்னடம் ,மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார்.

மேலும் 40 ஆயிரம் பாடல்களை படி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.பின்னணி பாடகருக்கான ஆறு தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.

அவர் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ , பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் தனது 74 வது வயதில் காலமானார்.இந்த செய்தி அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆகியோரை வருத்தமடைய செய்தது.

இதையும் படிங்க :கேரளாவில் திறக்கப்படும் பள்ளிகள் !