தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..நிறைவேறும் வாக்குறுதிகள் !

mega sport city
விளையாட்டு வீரர்களுக்காக மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இதில் திமுக ஆட்சி வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஆனார் ஸ்டாலின்.முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்து தமிழக மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களை அறிவித்துவருகிறார்.

கொரோனா காலத்திலும் தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.நிலம் இல்லாதவர்களுக்கு நிலம்,காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை மகளிர்க்கு பேருந்து பயண கட்டணம் ரத்து போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

மேலும் கொரோனா காலத்திலும் சிறப்பாக தமிழக அரசு செயலாற்றியது.தற்போது திமுக ஆட்சி அமைந்து இன்றுடன் 4 மாதங்கள் நிறைவடைந்துள்ளது.

இந்த நான்கு மாதத்திற்குள் அரசு மக்களுக்கு பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.மேலும் தேர்தல் காலத்தில் கூறிய 505 வாக்குறுதிகளில் இதுவரை 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும் நீங்கள் வாக்களித்த காரணத்தினால் நான் இன்று முதல்வர் பதவியில் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : காலத்தால் அழியாத பாடல்களை பாடிய எஸ்பிபி நினைவு நாள் இன்று !