ஆப்பிள் ஐபோன் 13 விற்பனை துவங்கியது

கடந்த 14ம் தேதி கலிபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சியில், ஐபோன் 13 மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் விற்பனை அமெரிக்கா, இந்தியா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை இன்று(செப்.,24) முதல் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 8:00 மணி முதல் ஆப்பிள் இணையதளம், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சில்லரை விற்பனை நிலையங்களில் விற்பனை துவங்கியது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐபோன்13 மினி ரூ.69,999 என்றும், ப்ரோ ரூ.1,19,000 என்றும், ப்ரோ மாக்ஸ் ரூ.1,29,000 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

ஐபோன் 13 வாங்க விரும்புபவர்களுக்காக பழைய மாடலை ஐபோன்களை மாற்றி கொள்ளும் வசதியையும் ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. பழைய ஆன்ட்ராய்டு போனையும் மாற்றி கொண்டு புதிய போன்களை வாங்க முடியும்.

இதையும் படிங்க: மாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் வீட்டில் 3 கிலோ தங்கம் பறிமுதல்