இன்றைய தங்கம் விலை

gold-rate-on-march-16th-2022-gold-prices-fall-as-investors-cautions-ahead-of-fed-decision
தங்கம் விலை தொடர் சரிவு

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர் சரிவைக் கண்டது. தொழில்துறை தேக்கத்தால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடுகளை திசை திரும்பியிருந்த நிலையில், தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பி இருப்பதாக தங்கம் விலை கணிசமாக குறைந்து வந்தது.

இந்த மாத தொடக்கத்தில் ரூ.37 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த தங்கம் தற்போது ரூ.36 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருக்கிறது.

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.4,469க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.35,752க்கு விற்பனையாகிறது.

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.40க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,400க்கும் விற்பனையாகிறது.