காஷ்மீர் மக்கள் தங்களது விருப்பப்படி பாகிஸ்தானுடன் இணையலாம்- இம்ரான் கான்

காஷ்மீர் விவகாரத்தில் பல தசாப்தங்களாக நடத்தப்படாமல் இருக்கும் ஐநா சபையின் பொது வாக்கெடுப்பு, நடத்தப்பட்டால் காஷ்மீர் மக்கள் தங்களது விருப்பப்படி, பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது சுதந்திர நாடாக இருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

இதுதொடர்பாக ட்விட்டரில் தொடர் பதிவுகளை இட்டுள்ள அவர், “காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை என்னும் குறிக்கோள் வெகு தொலைவில் இல்லை என்று நான் கூற விரும்புகிறேன்.

உங்கள் நியாயமான உரிமைகளை நீங்கள் அடையும் வரை பாகிஸ்தான் உங்களுடன் துணை நிற்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.