சவரனுக்கு 296‌ ரூபாய் குறைந்தது தங்கம் விலை

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்த‌ நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 296 ரூபாய் குறைந்தது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை 4613 ரூபையாக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 37 குறைந்துள்ளது.

அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி 36,904-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று 296 ரூபையாக குறைந்து 36,608-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 4576 ரூபையாக விற்பனை செய்யப்படுகின்றது.