வாடகை தாய் மூலம் பெற்ற குழந்தையுடன் ஷாப்பிங் சென்ற நடிகை

தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்தவர் ஷில்பா ஷெட்டி. குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர்கள் வாடகை தாய் முலம் குழந்தை பெற்றனர். குழந்தை பிறந்தது முதல் வீட்டிலேயே கவனமாக வளர்த்து வந்தார் ஷில்பா. அக்குழந்தைக்கு சமிஷா என பெயரிட்டார்.

தற்போது குழந்தை ஓரளவுக்கு வளர்ந்து விட்ட நிலையில் நேற்று மும்பையில் அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு ஷாப்பிங் வந்தார். நீல நிற உடை அணிந்து வந்த ஷில்பா குழந்தைக்கு அழகான பூப்போட்ட ப்ளு நிற உடை அணிந்திருந்தார்.