இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று (மார்ச் 15) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,227 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,230 ரூபாயாக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்துள்ளது.

அதேபோல, நேற்று 33,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 24 ரூபாய் சரிந்து 33,816 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை 10 பைசா உயர்ந்து 1 கிராம் ரூ.71.50க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.71,500 ஆக உள்ளது.