வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலைநிறுத்தம்

இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 9 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இந்திய அளவில் 88 ஆயிரம் வங்கி கிளைகள் மூடப்பட்டன.

தமிழகத்தில் 14 ஆயிரம் வங்கி கிளை ஊழியர்கள் வேலைக்கு வராததால் மூடப்பட்டன. இதனால் வங்கி சேவை முழுமையாக பாதிக்கப்பட்டன. பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கி சேவைகள் முடங்கின.

கடந்த 2 நாட்கள் (சனி, ஞாயிறு) விடுமுறை என்பதால் வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. அதனை தொடர்ந்து வேலைநிறுத்தமும் நடைபெறுவதால் வங்கி சேவை பாதிக்கப்பட்டன. வங்கியின் கடைநிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.