இன்றைய தங்கம் விலை

gold and silver rate
தங்கம் மற்றும் வெள்ளி விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 35 ஆயிரத்துக்கு கீழ் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று சற்ற அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்து ரூ.34,344-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.4,293-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.73-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.73,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. ஒரே நாளில் ரூ.608 குறைந்து சவரன் 34,128-க்கு விற்பனையானது.

மேலும் மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.448 குறைந்து சவரன் ரூ.34,288-க்கு விற்பனையானது. இந்நிலையில் தொடந்து தங்கத்தின் விலை இறங்குமுகத்தில் உள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.