ராம்நாத் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்

60 வயதைக் கடந்தவர்களில் சுமார் 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனையடுத்து, மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கும், இணைநோய்கள் கொண்ட 45 வயதைக் கடந்தவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு உள்ளிட்டவர்கள் ஏற்கெனவே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்தநிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியிலுள்ள ராணுவ மருத்துவமனைக்குச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.