சுவையான பாதாம் கீர் 10 நிமிடத்தில்

குழந்தைகளுக்கு பாதாம் கீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.வெதுவெதுப்பான பாலில் குங்குமப் பூவை ஊறவைக்கவும்.

பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவிட்டு தோலை உரித்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பாலை நன்றாக காய்ச்சவும், பால் அரை பங்காக சுண்டியதும் சர்க்கரை சேர்க்கவும்.

பிறகு பாதாம் விழுதை போட்டு 5 நிமிடம் அடி பிடிக்காமல் கிளறவும் பால் திக்காகும் போது ஏலக்காய் தூள், ஊறவைத்த குங்கும பூ சேர்த்து கிளறினால் பாதாம் கீர் ரெடி…