இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

gold and silver rate
தங்கம் மற்றும் வெள்ளி விலை

தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் , இந்த வாரம் தொடர்ந்து விலை உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4297 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 39 உயர்ந்துள்ளது.ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 312 உயர்ந்து ரூ. 34,376க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 69.30 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 1.20 விலை உயர்ந்து ரூ.70.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கரோனா தொற்று வந்த பிறகு தங்கத்தின் விலை மிகவும் உயர்ந்தது.மீண்டும் கரோனா கட்டுக்குள் வந்த பிறகு தங்கத்தின் விலை குறைய தொடங்கியது.தற்போது தங்கத்தின் விலை மீண்டும் ஏற தொடங்கியுள்ளது.