இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியீடு – போர்ப்ஸ் !

2021ம் ஆண்டிற்கான இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.இந்திய அளவில் பெரும் கோடீஸ்வரராக ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்தார்.

சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துடன் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.இரண்டாம் இடத்தில் சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துடன் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி உள்ளார்.

3 வது இடத்தில்,HCL நிறுவனர் ஷிவ் நாடார் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் உள்ளார்.அவன்யூ சூப்பர்மார்க்கெட் அதிபர் ராதாகிஷண் தமானி ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடன் 4 ஆம் இடத்திலும் உள்ளனர். 5ம் இடத்தில் கோடக் மஹிந்திரா தலைவர் உதய் கோடக் உள்ளார்.

இதை தொடர்ந்து லட்சுமி மிட்டல் ,குமார் பிர்லா,சைரஸ் பூனவல்லா,திலீப் ஷாங்க்வியும்,சுனில் மிட்டல் & குடும்பம் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.