தங்கம் சவரனுக்கு ரூ.256 உயர்வு..!

உயர்வில் தங்கத்தின் விலை

தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் விலையேற்றம் இருந்தது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக சென்ற வாரம் முழுவதும் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்டது.

ஆனால் நேற்றும் இன்றும் தங்கம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.35 ஆயிரத்து 728-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 466 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.67 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.70-க்கு விற்கிறது.

இதையும் படிங்க: ஜே.இ.இ., மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு