ஜே.இ.இ., மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு

பொறியியல் நுழைத்தேர்வான ஜே.இ.இ., மெயின் நுழைவுத்தேர்வுக்கான 4ம் கட்ட தேர்வின் முடிவுகள் வெளியானது. இதில், 18 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

பொறியியல் நுழைவுத்தேர்வான ஜே.இ.இ., மெயின் தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெறும். முதல் கட்டமாக பிப்ரவரி மாதமும் அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜே.இ.இ., மெயின் 2021 தேர்வு நடைபெறுவது வழக்கம். ஒரே மாணவர் 4 முறையும் தேர்வை எழுதலாம். எனினும் அவற்றில் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும்.

இதற்கிடையே இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாகக் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஜே.இ.இ., மெயின் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், ஏப்ரலில் நடக்க இருந்த தேர்வு, ஜூலை 20 முதல் 25 வரை நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் வெளியானது.

தற்போது, ஆகஸ்ட் 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில் நடந்த 4ம் கட்ட ஜே.இ.இ., மெயின் தேர்வுக்கான முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதன்படி, தேர்வு எழுதியவர்களில் 44 பேர் 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். மேலும் 18 பேர் முதல் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் ஆந்திர பிரதேசத்தில் இருந்து 4 பேர், ராஜஸ்தானில் இருந்து 3 பேர், தெலுங்கானா மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து தலா 2 பேர் என மொத்தம் 18 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள்