தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

பெண்களுக்கு பிடித்தமான ஒன்று தங்கம்.தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.

இந்நிலையில் ,நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4331 க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு 1 ரூபாய் குறைந்து , கிராமானது ரூ.4330 க்கு விற்பனையாகிறது.மேலும் 8 கிராம் ஆபரணதங்கத்தின் விலை ரூ.34640 உள்ளது.

1 கிராம் தூய தங்கத்தின் விலை ரூ.4724 ஆக இருக்கிறது.8 கிராம் தூய தங்கத்தின் விலை ரூ.37792 ஆக இருக்கிறது.இன்று வெள்ளியின் விலையானது கிராமிற்கு ரூ.72.50 க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.72500 க்கு விற்பனையாகிறது.