covid cases in tn:தமிழகத்தில் இன்று 4,862 பேருக்கு கொரோனா !

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

covid cases in tn: கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 27,60,449. மேலும் இன்று 4,862 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,17,382.இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை: 4,862 . சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2,481

இன்று கரோனா தொற்று காரணமாக 9 பேர் உயிரிழந்தனர்.5 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர்.covid cases in tn

தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்க நாளை முதல் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். இருப்பினும் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.

இதையும் படிங்க : Lockdown in tamilnadu : தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு !