அதிர்ச்சி..முஸ்லிம் பெண்களை செயலி மூலம் ஏலத்தில் விற்பனை !

100க்கும் மேற்பட்ட முஸ்லீம் பெண்களின் புகைப்படங்களை ஒரு செயலி இணையத்தில் ஏலத்தில் போட்டதை அடுத்து உத்தரகண்டைச் சேர்ந்த பெண்ணையும் பெங்களூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரையும் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

முஸ்லிம் பெண்களை ஏலத்தில் விற்பனை செய்ய இருப்பதாகக் கூறி ஏராளமான பெண்களின் படத்துடன் புல்லி பாய் என்ற செயலி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.புல்லி பாய் – இணைய தளமான GitHub இல் ஹோஸ்ட் செய்யப்பட்டது, பின்னர் அது அகற்றப்பட்டது.

இந்தியாவில் முஸ்லீம் பெண்களை ஆன்லைனில் “ஏலம்” மூலம் துன்புறுத்துவதற்கு சில மாதங்களில் இது இரண்டாவது முயற்சியாகும்.

இந்த வழக்கில் உத்தரகண்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை மும்பை சைபர் குற்றப் பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்படும் முக்கிய நபர் அவரே என்று அவரிடம் விசாரணையில் தெரியவந்துள்ளது இரண்டு நிகழ்வுகளிலும், உண்மையான எந்த விதமான விற்பனையும் இல்லை – முஸ்லிம் பெண்களின் தனிப்பட்ட படங்களைப் பகிர்வதன் மூலம் அவர்களை இழிவுபடுத்துவதும் அவமானப்படுத்துவதும் ஆகும் என்று தெரியவந்துள்ளது.

புல்லி பாய் செயலியை உருவாக்கியவர்கள் மீதும் அது குறித்து தகவல் பரவச் செய்த ட்விட்டர் பதிவாளர்கள் மீதும் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.