இன்றைய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒருநாளில் மட்டும் 10,723 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 42 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 3,304 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,91,451 ஆக உயர்ந்துள்ளது.

பலி எண்ணிக்கை 13,113 ஆக உயர்ந்துள்ளது. இன்று 5,925 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 9,07,947 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 70,391 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.