தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் 25-ம் தேதி சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டு வந்தது. நோய்த் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 12-ம் தேதி தலைமைச் செயலர். அரசு ஆலோசகர், அனைத்து துறை உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் தோற்று அதிகரித்து வருவதால் ஏப்ரல் 20 முதல் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார்/ பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.