விவேக்கின் நிறைவேறாத 2 ஆசைகள்..!

விவேக்கின் நிறைவேறாத 2 ஆசைகள் குறித்து தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் ஆசைப்படி தமிழகம் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்ட அவர், 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்.

அவரால் 1 கோடியை எட்ட முடியவில்லை. அதோடு திரைப்பட இயக்கத்தில் ஆர்வம் கொண்டிருந்த விவேக், விரைவில் படம் ஒன்றை இயக்கவும் திட்டமிருந்தார். இதற்காக சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் போட்டிருக்கிறார்.

கதை விவாதம், நடிகர்-நடிகை மற்றும் தொழில்நுட்ப குழுவினர் தேர்வு நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக நடந்த அவரது மறைவால், விவேக்கை ஒரு இயக்குநராக பார்க்கும் வாய்ப்பை நாம் இழந்திருக்கிறோம்.