கடந்த 24 மணி நேரத்தில் 41,806 பேருக்கு கொரோனா

coronavirus
கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,806 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,09,87,880 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,01,43,850 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 39,130 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,32,041 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 39,13,40,491 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.