தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கில் கொரோனா தொற்றின் நாள் பாதிப்பு குறைந்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 3,867 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.சென்னையில் 222 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை. 24,96,287. தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24,27,988.

இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 72 பேர் உயிரிழந்தனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.