மக்களுக்கு ஒரு நற்செய்தி..நாளை முதல் தமிழகம் முழுவதும் பேருந்து சேவை !

கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் ஜூலை 12 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.தற்போது தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வை தொடர்ந்து நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் இருக்கும் விகிதம் குறித்து வகை 1 ,2 ,3 என பிரிக்கப்பட்டது.தற்போது மிழகம் முழுவதும் ஒரே அளவில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக 70 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.பேருந்துகளில் பயணிக்கும் மக்கள் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகியவற்றை பின்பற்ற நடத்துனர்கள் வலியுறுத்து போக்குவரத்து கழகங்கள் அறிவுறுத்தியுள்ளன.