டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் !

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனை கட்டுப்படுத்த மாநில மற்றும் ஒன்றிய அரசு தனி தனியே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது.

கொரோனாவின் முன்றாம் அலை இந்தியாவை தாக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.அதனால் தடுப்பூசி போடும் பணிகளை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 738 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.இதில் 1,30,487 பேர் முதல் டோசும், 30,251 பேர் 2வது டோசும் போட்டு கொண்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 94 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன.மேலும் உயிர் பலி 7 என்று பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்றின் மொத்த எண்ணிக்கை டெல்லியில் 14,34,554 ஆக உள்ளது.மேலும் இறப்பு எண்ணிக்கை 24,995 ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.