சீனாவின் சினோவாக் தடுப்பூசி தென் ஆப்பிரிக்காவில் அனுமதி !

சீனாவின் சினோவாக் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கியதாக தென்னாப்பிரிக்க சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் நாள்தோறும் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அதனால் சீனாவின் சினோவாக் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.60,000 பேர் வரை பலியாகி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 24,000 புதிய கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளன.மேலும் 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.இதுவரை தென் ஆப்பிரிக்காவில் சுமார் ஐந்து சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.