இன்றைய ராசி பலன்

மேஷம்:

சுபகாரிய நிகழ்வுகளை சற்று தள்ளிவைப்பது நல்லது வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். ஒரு சிலருக்கு மொபைல்போனை மாற்ற வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான அடித்தளங்களை அமைத்து விடலாம்.

ரிஷபம்:

கல்விக்காகவும் உபயோகத்திற்காகவும் வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறும்.திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் ஓரிரு நாட்கள் தாமதமாக வாய்ப்பு உள்ளது.

மிதுனம்:

உயர்கல்வி கற்று கொண்டு இருப்பவர்களுக்கு புதிய பிரச்சனைகள் தோன்றிக் கொண்டே இருக்கும். சற்று கடின முயற்சிக்குப் பின் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் திறம்பட சமாளிப்பீர்கள்.

கடகம்:

எதிர்பாராத தனவரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்திற்காக அல்லது தொழில் நிலைக்காக அதிகபட்ச அலைச்சல்களை சந்திக்க நேரிடலாம். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம்.

சிம்மம்:

பணிச்சுமை கூடுதலாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவீர்கள். உத்தியோக உயர்வு கிடைக்க புதிய வாய்ப்புகள் தென்படும். ஒருசிலர் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

கன்னி:

கல்வி பயின்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருந்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் ஓரிரு நாட்கள் தாமதத்திற்கு பின் வெற்றிகரமாக முடியும்.

துலாம்:

ஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தென்படும். இடமாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது வரும்.

விருச்சிகம்:

நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சியும் சந்தோசமும் உண்டாக வாய்ப்பு உள்ளது. பொருளாதாரப் பிரச்சினைகளை திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உங்கள் கடின முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

தனுசு:

கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நோக்கி செல்ல வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்களால் நன்மை உண்டாகும், என்பதால் தாராளமாக நீங்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளலாம்.

மகரம்:

வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். பூர்வீகத்தில் பிரச்சனை உள்ளவர்களுக்கு தீர்வு உண்டாகும். ஒரு சிலருக்கு பிரயாணம் செய்ய நேரிடும்.

கும்பம்:

கல்வி மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். படிப்பை முடித்து வேலையில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

மீனம்:

உடல் ஆரோக்கியத்தில் சற்று தொல்லைகள் ஏற்பட்டு விலகும் என்பதால், உணவு பொருட்களில் கவனமாக இருக்கவும். உடற் பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றில் ஈடுபடுவது உடலையும் மனதையும் நன்றாக இருக்க வைக்கும். மாணவர்களின் கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை.