டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட துறைத் தேர்வுகளில் 129 தேர்வுகளின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

அப்பட்டியலில் 14 தேர்வுகளைத் தவிர மற்ற அனைத்துத் தேர்வுகளும் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் மீதமுள்ள 14 தேர்வுகளின் முடிவுகளும் ஜூன் எட்டாம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தேர்வுகளை எழுத விரும்பும் தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மே மாதத்துறைத் தேர்வுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜூன் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.