ஆக்சிஜன் விநியோகம் ஆரம்பம் – ஸ்டெர்லைட் !

கரோனா தொற்று தமிழகத்தை அதிகம் பாதித்து வருகிறது.ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில்,கட்டுப்பாடுகளுடன் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டு ஆலை திறக்கப்பட்டது.

இந்த ஆக்சிஜன் உற்பத்தி பணியில், 320 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது உற்பத்தி தொடங்கி தற்போது விநியோகப் பணிகளும் தொடங்கியுள்ளன.

முதற்கட்டமாக ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 5000 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஜன் விநியோக பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

தமிழ்நாடு மெடிக்கல் கார்ப்பரேஷன் சென்னை மூலமாக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது