முன்னாள் மத்திய அமைச்சர் மாதாங் சின் கரோனா தொற்றால் காலமானார் !

கரோனா தொற்றால் கடந்த வருடம் உயிரிழப்பை விட இந்த வருடம் மோசமாக உள்ளது.பொதுமக்கள் அல்லாமல் அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள் உள்பட பல பேர் கரோனா தொற்றால் இறக்கின்றனர்.

தற்போது முன்னாள் மத்திய அமைச்சரும், அசாம் மாநில காங்கிரஸ் தலைவருமான மாதாங் சின் கரோனா தொற்றால் காலமானார்.

கடந்த மாதம் 22ஆம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலன் அளிக்காததால் அவர் உயிரிழந்துள்ளார்.

இவர் 1994 முதல் 1998 வரை மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சராக பணியாற்றினார்.முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ். நெருங்கிய உறவினர் ஆவார்.