நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிவாரண நிதி

நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் புதியதாக பதிவு செய்துள்ள கலைஞர்களுக்கு தலா ₹2000 சிறப்பு நிவாரண நிதி வழங்குவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

புதியதாக வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கும் கொரோனா நிதியுதவி வழங்க அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் அரசாணை வெளியீடு

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை செயல்படுத்துதல் – தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் புதிதாக பதிவு செய்துள்ள தவில், நாதஸ்வரம், மற்றும் தெருக்கூத்துக் கலைஞர்கள் உள்ளிட்ட 6,810 கலைஞர்களுக்கு அரசின் சிறப்பு நிவாரண நிதியுதவி ரூ.2000 வழங்கிட கலை பண்பாட்டுத் துறை இயக்குநருக்கு நிர்வாக ஆணை வழங்கி ஆணை வெளியிடப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.