மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கோரிக்கை

கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், சிபிஎஸ்இ தேர்வுகள் நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ட்விட்டர் பதிவில், ‘பேரழிவு தரும் கொரோனா இரண்டாவது அதிகரித்துவரும்போது சி.பி.எஸ்.இ தேர்வுகளை நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

பெரிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அனைத்து தரப்பினருடனும் கலந்து ஆலோசிக்கவேண்டும். எத்தனை முறை இந்திய இளைஞர்களின் எதிர்காலத்துடன் மத்திய அரசு விளையாட உள்ளது?’என்று கேள்வி எழுப்பியுள்ளார்.