நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண நிதி – தமிழக அரசு !

கரோனா காலத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரணத் தொகையாக இரண்டு முறை தலா ஆயிரம் ரூபாய் நிதியை தமிழக அரசு வழங்கியது.

இந்நிலையில் புதிதாக வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கும் நிதி உதவி வழங்க அரசுக்கு நீதிமன்றம் அறிவுருத்திய நிலையில் அவர்களுக்கும் நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை செயல்படுத்துதல் – தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் புதிதாக பதிவு செய்துள்ள தவில், நாதஸ்வரம், மற்றும் தெருக்கூத்துக் கலைஞர்கள் உள்ளிட்ட 6,810 கலைஞர்களுக்கு அரசின் சிறப்பு நிவாரண நிதியுதவி ரூ.2000 வழங்கிட கலை பண்பாட்டுத் துறை இயக்குநருக்கு நிர்வாக ஆணை வழங்கி ஆணை வெளியிடப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.