கும்பமேளா திருவிழா: ஆயிரக்கணக்கில் கூடிய பொதுமக்கள்

உலகின் மிகப்பெரிய விழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் கும்பமேளா திருவிழாவானது கடந்த 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 30-ம் தேதி வரை இந்த திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கும்பமேளா திருவிழாவானது அசாதாரணமான சூழ்நிலையில் இந்த ஆண்டு நடைபெறுகிறது. ஹரித்வாருக்கு வரும் பக்தர்கள் கொரோனா வைரஸ் இல்லை என்ற சான்றிதழை கட்டாயமாக கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதால் கொரோனா பரவல் தொடர்பான கவலை இல்லை என பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் அதிகளவில் பரவாமல் தடுப்பதற்கு தனிமனித இடைவெளிகளை தவிர்ப்பதும் கூட்டங்களை தவிர்ப்பதும் முக்கிய காரணிகளாக இருப்பதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், புனித யாத்திரைகளின் போது இந்த விதிமுறைகளை கடைபிடிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என பக்தர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.