மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்காவிட்டால் போராட்டம் நடக்கும் !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தை பெரிதும் தாக்கியது.இந்நிலையில்,தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்த விலை உயர்வு காரணமாக நடுத்தர மக்களின் மிக சிரமப்படுகின்றனர்.தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்கவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.

மேலும் பெட்ரோல் விலையை தமிழக அரசு 3 ரூபாய் குறைத்துள்ளது. மத்திய அரசும் பெட்ரோல் டீசல் விலையையும் குறைக்க முன்வர வேண்டும்.பெட்ரோல் மற்றும் டீசல் உயர்வால் அணைத்து பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளது.என தெரிவித்துள்ளார்.