மறுபடியும் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை வனிதா விஜயகுமார் !

நடிகை வனிதா விஜயகுமார் விஜய் டிவி யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.தற்போது தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.சமூக வலைத்தளங்களில் பேசும் சில பேச்சுக்களால் சர்ச்சைகளில் சிக்குபவர்.

தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் வனிதா, பிபிஜோடிகள் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனுடன் சண்டையிட்டு விலகியது மீண்டும் சர்ச்சையை உருவாக்கியது.

இவருக்கும் பீட்டர் பால் என்பவருக்கும் திருமணம் நடந்தது பின்பு அவர்கள் பிரிந்தது அனைவர்க்கும் தெரியும்.சமீபத்தில் நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் மாலை மாற்றிக்கொள்கிற புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கு ரசிகர்கள் 4 வது திருமணமா என்று கேள்வியெழுப்பினார்.இதற்கு பதிலடியாக நான் 4 கல்யாணம் இல்லை 40 கல்யாணம்கூட பண்ணிக்குவேன் உங்களுக்கு என்ன பிரச்னை என்று அதிரடியாக கூறினார்.

தற்போது , வனிதா கழுத்தில் தாலி கயிருடன் இருக்கிற ஒரு செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் , பிக்கப் டிராப் ஷூட்டிங் செல்ஃபி என்று குறிப்பிட்டுள்ளார்.