தமிழகத்தில் குறைக்கப்படும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் !

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்டான மாணவர்களுக்கு மறுதேர்வு

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இந்தனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்நிலையில்,தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

ஒரு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன.மேலும் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்பு மூலம் படங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பள்ளிகள் மீண்டும் திறப்படுமா என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன.பஞ்சாப்,கர்நாடக போன்ற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டத்தை குறைத்து பள்ளிக்கல்வித்துறை அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு கல்வி சுமை குறையும் என்றும் அவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

1 முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரையான பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன . அதேபோல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு 32 சதவீதமும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 39 சதவீதமும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா 35 சதவீதமும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது.