தமிழக வேளாண் பட்ஜெட் சிறப்பம்சங்கள் !

தமிழகத்தின் 2021-22 ஆண்டிற்கான பட்ஜெட், சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.தமிழ்நாட்டில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவித்தார்.

இருபோக சாகுபடி நடைபெறும் பரப்பை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.கால்வாய், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாரும் திட்டம் ரூ.250 கோடி செலவில் பயன்படுத்தப்படும்.

சாகுபடி பரப்பு 60 விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்தப்படும். மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட்டுகள் வழங்கப்படும்.

கரும்பு விவசாயிகளின் கோரிக்கையினை சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.150 வீதம் நேரடியாகக் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் மூன்று கோடி ரூபாய் நிதியில் அமைக்கப்படும்.