மீரா மிதுன் இவர் விஜய் டிவி யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்.சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசிவந்தார்.
சமீபத்தில் பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசி தனது ஆண் நண்பருடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அவர்களை சினிமா துறையில் இருந்து நீக்க வேண்டும் என சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசியிருந்தார்.
இவரின் இந்த பேச்சு பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தார்.
நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தற்போது சென்னை மத்திய மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுனை கைது செய்துள்ளனர்.



