ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் அராஜகம் !

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய நகரங்களை கைப்பற்றியுள்ளனர்.அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.

கந்தஹார் தலிபான் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுளளது.மேலும் பொது மக்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தலிபான்கள் ஆக்கிரமிப்பைத் தடுக்க முடியாமல் ஆப்கான் அரசு திணறிவருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 12 மாகாணங்கள் தலிபான்கள் வசம் சென்றுள்ளன.ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இருப்பினும் தலிபான்களுக்கு எதிராக ஆப்கான் அரசு எதிர்த்து போராடும் என்று ஆப்கானிஸ்தானின் முதல் துணை அதிபர், அம்ருல்லா சலே ட்வீட் செய்துள்ளார்.