தமிழகத்தில் ஊரடங்கை தொடர ஆலோசனை !

தமிழகத்தில் கரோனா பாதிப்பு சதவீதம் அதிகரித்து வருகிறது.தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.மேலும் தமிழக அரசு மே 24 வரை ஊரடங்கை அறிவித்தது.

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,ஊரடங்கை நீடிப்பதை குறித்த ஆலோசனை மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் நடத்தப்படுகிறது.

இதில் மேலும் 2 வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென மருத்துவக் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 35,000-ஐ கடந்து வருகிறது.இதனால் ஊரடங்கு தொடரலாம் என்று கருதப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஐ.சி.எம்.ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.