தொற்று கட்டுக்குள் வராததால் மாநில அரசுகளின் தொடரும் ஊரடங்கு !

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தொற்று அதிகம் பரவும் மாநிலமாக மகாராஷ்டிரா,கேரளா,கர்நாடகா இருக்கின்றது.இந்த மாநிலங்களில் பொதுமுடக்கம் அமலில் இருக்கிறது அப்படி இருந்தும் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீடிக்க அரசு முடிவு செய்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 10ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மே 25ம் தேதி மாலை 6 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது,கர்நாடக மாநிலத்தில் ஜூன் 07-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். மேலும் அரசு மாவட்ட மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோயாள் பாதிக்கப்படுவோருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும், அவர் தெரிவித்தார்.