பிரபல டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தடுப்பூசி எடுத்துக்கொண்டதன் பதிவு !

விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடி இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.20 வருடங்களுக்கு மேலாக இந்த துறையில் உள்ளார்.மேலும் இவரது பேச்சிற்கு ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

தற்போது அவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.தனது போட்டோவை ஷேர் செய்துள்ள டிடி பதிவிட்டிருப்பதாவது, ரொம்ப யோசிச்சேன், பயந்தேன், ஏன்னா தானாக நோய் எதிர்ப்பு சக்திக்கு மருந்துகள் கூட எடுக்குறேன்.

அதனால் என் மருத்துவரிடம் கேட்டேன். அவரு சொன்னாரு மத்த மருந்துகளை நிறுத்துங்கள், இப்போதைக்கு தடுப்பூசிதான் முக்கியம்.

நம்மள நம்ம குழந்தைங்கள மூன்றவாது அலையில் இருந்து காப்பாத்த முடியும். அதனால கோவிஷீல்டு போட்டுக்கிட்டேன்.நீங்களும் உங்கள் மருத்துவர்கிட்ட மட்டும் கேட்டு முடிவு பண்ணுங்க. நான் ரிஜிஸ்டர் செய்து தடுப்பூசி போட்டுக் கொண்டேன். நம் மாநில அரசும் உங்கள் மருத்துவரும் சொல்வதை கேளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.