மே 30 வரை தொடரும் ஊரடங்கு – கேரளா !

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவருகிறது.தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமுடக்கத்தை அறிவித்தன.

கரோனா தொற்று அதிகம் இருக்கும் மாநிலமாக கேரளா உள்ளது.அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்,கேரளாவில் ஊரடங்கு மே 30 வரை நீட்டிக்கப்படும்.தொற்று குறைவாக உள்ள இடமான திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய இடங்களில் மும்மடங்கு ஊரடங்கு நாளை திரும்பப் பெறப்படும்.

மேலும் மலப்புரத்தில் சோதனை நேர்மறை விகிதம் குறையவில்லை என்பதால், அங்கு மும்மடங்கு ஊரடங்கு தொடரும். என்று கேரள முதல்வர் கூறினார்